Puducherry : புதுச்சேரியில் பள்ளிகள் ஜுன் 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Puducherry : புதுச்சேரியில் பள்ளிகள் ஜுன் 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 4:15 pm
காரைக்கால், மே 28 2026: புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி துவங்கியது. விடுமுறை காலத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
முன்னதாக மே 31-ம் தேதி வரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பெற்றோரும் மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் 4-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க ஜி ராம் ஜி வேலை வாய்ப்பு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்.. என்னென் மாற்றங்கள்? முக்கிய அம்சங்கள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com