பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

TNEA 2026 Rank List Released : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்; 200 மதிப்பெண்களில் 200 பெற்ற 53 மாணவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Published on: July 1, 2026 at 4:21 pm

சென்னை, ஜுலை 01 2026: தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் இன்று வெளியிட்டார். இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்திய 2,45,235 பேரில், 2,36,017 மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,30,767 மாணவர்கள், 1,05,245 மாணவிகள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு 53 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில் 39 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலும், 14 பேர் பிற கல்வி வாரியங்களிலும் பயின்றவர்கள்.

இதில், தரவரிசைப் பட்டியலில் தர்மபுரியைச் சேர்ந்த மாணவி அக்சிதா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூரைச் சேர்ந்த ரோஹித் பாலன் இரண்டாம் இடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த 50,494 பேரில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட 46,604 மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டில் 3,210 பேரும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 1,176 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 500 பேரும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அல்லது குறைகள் உள்ளவர்கள் ஜூலை 6-ஆம் தேதிக்குள் சேவை மையங்களில் முறையிடலாம்.

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதி 7.5 சதவீத இடஒதுக்கீடு, விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்குத் தொடங்குகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் TNEAONLINE.ORG என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க நீங்க பட்டதாரி இளைஞரா? வங்கி வேலை ரெடி.. உடனே விண்ணப்பிங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com