சிறப்பு TNTET தேர்வுக்கு புதிய பணிச்சான்றிதழ் கட்டாயம்.. நவ.19 கடைசி நாள்!

TNTET New Certificate Rule: சிறப்பு TNTET தேர்வுக்கு புதிய பணிச்சான்றிதழ் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 15, 2026 at 1:35 pm

சென்னை, நவ.15, 2026: தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (Special TNTET-2) விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், புதிய பணிச்சான்றிதழைப் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 26-ம் தேதிக்குப் பிறகு உரிய அலுவலர்களிடம் கையொப்பம் மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட புதிய பணிச்சான்றிதழை மட்டுமே விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கெனவே ஜூலை மாதம் நடைபெற்ற முதல் கட்ட சிறப்பு TNTET தேர்வில் பயன்படுத்திய பழைய பணிச்சான்றிதழைப் பதிவேற்றம் செய்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட சிறப்பு TNTET தேர்வுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் பெயர், பிறந்த தேதி, பாலினம், சமூகப் பிரிவு, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களில் பிழைகள் ஏற்படாமல் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் நவம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காவல் துறையில் 10,000 புதிய பணியிடங்கள்.. 6 மாதங்களுக்குள் நிரப்ப முதல்வர் விஜய் உத்தரவு!

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com