காவல் நிலைய மரணங்கள்.. தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Custodial Deaths Controversy: காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக, தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 15, 2026 at 1:19 pm

சென்னை, நவ.15, 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ள அவர், காவல் நிலையங்களிலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குறியாக்குவதாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு சினிமா படங்களின் டாப்-10 பட்டியலைப் போல வரிசை போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், செஞ்சி சிறுமி மாயமான விவகாரம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை, காஞ்சிபுரம் டாஸ்மாக் பணம் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, தொடர் குற்றச் சம்பவங்களைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :ஊரக உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: ரூ.1,500 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி முடக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com