Vanni Arasu on DMK: தி.மு.க.வை தற்போதும் நேசிக்கிறோம் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
Vanni Arasu on DMK: தி.மு.க.வை தற்போதும் நேசிக்கிறோம் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

Published on: November 14, 2026 at 2:35 pm
சென்னை, நவ.14, 2026: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது, தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், ஆட்சியில் எந்தவிதமான குளறுபடியோ, குழப்பமோ இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், 5 ஆண்டுகளும் நல்லாட்சியாகத் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது தொடர்பாகப் பேசிய அவர், ஒவ்வொரு பிரச்சினையையும் காவல்துறை உடனடியாகவும் தீவிரமாகவும் கையாண்டு வருவதாகக் கூறினார். காவல்துறை மெத்தனமாகச் செயல்படவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து தி.மு.க. உடனான உறவு குறித்துப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தி.மு.க.வை தற்போதும் நேசிக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதால் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. இப்போதும் தி.மு.க.வை நேசிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், தி.மு.க. தங்கள் கட்சி மீது வன்மத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உரிமைத் திட்டம் தொடர்பாக தி.மு.க. அளித்த அறிக்கையே சான்று என்றும் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க : மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 5 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com