தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததா? எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் கேள்வி!

Minister Shahjahan: தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததா என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: November 14, 2026 at 1:15 pm

திருச்சி, நவ.14, 2026: திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதிக்கு வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் ஆட்சி, மக்கள் மாற்றத்தை விரும்பி அளித்த வாக்குகளுக்கு ஏற்ப சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில்வதற்கான உதவித்தொகை குறித்துப் பேசிய அவர், இந்த ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களில் 7 மட்டுமே தகுதியானவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். எனவே, விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஷாஜகான், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது போல உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பேசுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்த 5 ஆண்டுகளில் 9,000 கொலைகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கொலைச் சம்பவங்களை நியாயப்படுத்திப் பேசவில்லை என்றும் விளக்கமளித்தார்.

ஐந்து ஆண்டுகளும் அமைதிப் பூங்காவாக இருந்தது போலவும், இந்த ஆண்டுதான் முதன்முறையாகக் கொலை நடந்தது போலவும் பேசுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று விமர்சித்தார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் மீது சமூக வலைதளங்களில் வரும் புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். சூப்பர் எல் நினோ காரணமாகவே விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : “ஆல் இஸ் வெல்.. கான்பிடன்டா இருங்க!” – குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதலமைச்சர் விஜய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com