AI-Generated Books Removed: தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் இருந்து 2,200 ஏஐ உருவாக்க புத்தகங்கள் அகற்றப்பட்டன.
AI-Generated Books Removed: தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் இருந்து 2,200 ஏஐ உருவாக்க புத்தகங்கள் அகற்றப்பட்டன.

Published on: November 13, 2026 at 11:55 am
தென்காசி, நவ.13, 2026: கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் புத்தகங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட மத்திய நூலகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய நூலகத்தில், அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்ட சுமார் 2,200 புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் ரூ.27 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா அர்ஜுன் உள்ளிட்ட பெயர்களில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற பதிப்பகங்களுடன் ஒப்பிடும்போது அகல் விளக்கு பதிப்பகத்துக்கு விரைவாகப் பணம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தின் பிற நூலகங்களிலும் இதுபோன்ற புத்தகங்கள் உள்ளனவா என ஆய்வு செய்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : தமிழகத்தில் 15,000 போலீஸாரை புதிதாக நியமிக்க திட்டம்.. முதல்வர் விஜய் ஆலோசனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com