ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!

IPL 2027 Player Trade : 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முக்கிய வீரர்கள் பரிமாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 12, 2026 at 2:03 pm

மும்பை, நவ.12, 2026: 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முக்கிய வீரர்கள் பரிமாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையில் பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார். ஏற்கெனவே மும்பை அணியில் அவருக்கு ரூ.16.35 கோடி ஒப்பந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அவர் தனது தற்போதைய ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையிலேயே மும்பை அணியில் இணைகிறார்.

2015-ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா, 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று கேப்டனாக கோப்பையை வென்றார். மறுபுறம், 2019 முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அர்ஷ்தீப் சிங், அந்த அணியின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக உள்ளார்.

இதையும் படிங்க : 75 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. 41 வயதில் இரட்டை சதம் அடித்த கிரேக் எர்வின்!

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம்.. நவ.20-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்!
CM Vijay Tirchy Visit

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம்.. நவ.20-ல் திறந்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com