CM Vijay Tirchy Visit : திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, நவ.20-ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்.
CM Vijay Tirchy Visit : திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, நவ.20-ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்.

Published on: November 11, 2026 at 7:54 pm
Updated on: November 11, 2026 at 7:55 pm
சென்னை, நவ.11, 2026: திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை, வரும் நவம்பர் 20-ம் தேதி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைக்க உள்ளார்.
ரூ.134 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டிடம், 600 படுக்கைகள் கொண்டதாகும். தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்குக் கூடுதல் இடவசதியையும் மேம்பட்ட சிகிச்சை வசதிகளையும் வழங்கும் வகையில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஏற்கெனவே உள்ள கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறைக்க இந்தப் புதிய கட்டிடம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரின் வருகை மற்றும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க : மாவட்ட ஆட்சியருக்கு ஆட்சேபனை குறுஞ்செய்தி அனுப்பவில்லை.. த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com