‘அப்பா செத்துட்டாங்க’.. சோனியாவிடம் பிரியங்கா காந்தி என்ன சொன்னார்?

Sonia Gandhi on Rajiv’s assassination:
: ராஜீவ் காந்தி படுகொலையின் போது, அதிர்ச்சியடைந்த பிரியங்கா கூறிய வார்த்தைகள் குறித்து சோனியா காந்தியின் நினைவலைகளை பார்க்கலாம்.

Published on: November 11, 2026 at 7:04 pm

புதுடெல்லி, நவ.11, 2026: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நிகழ்ந்த துயரமான தருணங்களை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது புதிய சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தின்போது மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த அன்று, சோனியா காந்தி வீட்டில் இருந்தபோது மகள் பிரியங்கா பதற்றத்துடன் அவரிடம் வந்துள்ளார். ராஜீவ் காந்தி சென்ற இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும், பலர் உயிரிழந்ததாகவும், தந்தை காயமடைந்திருக்கலாம் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் சென்னைக்குச் செல்லத் தயாராகியுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து திரும்பிய பிரியங்கா, தனது தாயிடம், “அப்பா இறந்துவிட்டார்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட சோனியா காந்தி அதிர்ச்சியில் நிலைகுலைந்து, கணவரை இழந்த துயரத்தில் கதறி அழுததாகவும், அவருடன் கடைசியாக இருந்திருக்க வேண்டுமென வேதனைப்பட்டதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி தனது கண்களை தானமாக வழங்கியிருந்ததால், அவரது உடலைப் பார்க்க வேண்டும் என சோனியா விரும்பியுள்ளார். ஆனால், வெடிகுண்டு தாக்குதலின் தீவிரம் காரணமாக உடல் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரமான அனுபவங்கள் அடங்கிய சோனியா காந்தியின் 544 பக்க சுயசரிதை ‘Belonging’ நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க : திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு! Supreme Court

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com