MLA Denies WhatsApp Allegations : மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
MLA Denies WhatsApp Allegations : மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 6:03 pm
Updated on: November 10, 2026 at 6:06 pm
சென்னை, நவ.10, 2026: மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆட்சேபனைக்குரிய செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மீது பரப்பப்படும் தகவல்கள் வதந்திகள் மட்டுமே; நான் அத்தகைய செயலில் ஈடுபடவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆட்சியர் இல்லத்தில் பாதுகாப்புப் பணியாளர்களும் சிசிடிவி கேமராக்களும் உள்ள நிலையில், நான் எப்படி அங்கு செல்ல முடியும்?” என்றார்.
#WATCH | Kallakurichi, Tamil Nadu: On allegations against him of sending an inappropriate message to Kallakurichi Collector over WhatsApp, TVK MLA Arul Vignesh says, "Everyone came to know of the rumours. I am clearly saying that I have not done anything. Rumours are rumours. It… pic.twitter.com/BLCkDKICeo
— ANI (@ANI) November 10, 2026
மேலும், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தநான், மக்களின் ஆதரவாலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் மூலமாகவும் அரசியலில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, தனக்கு பொறுப்பு இருப்பதால், இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கப் பரிசோதனைக்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், மக்கள் சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், இத்தகைய அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : வேலூரில் பாமக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. 10 முறை சுட்டதால் அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com