கருங்கடல் வழியாக உணவு ஏற்றுமதிக்கு உதவ இந்தியா தயார்.. ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதி!

Narendra Modi: கருங்கடல் வழியாக உணவு ஏற்றுமதிக்கு உதவ இந்தியா தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 1:49 pm

புதுடெல்லி, நவ.10, 2026: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக மோடி திங்கள்கிழமை (நவம்பர் 9) ஆலோசனை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ரஷ்யா – உக்ரைன் போர் நிலவரம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மற்றும் போரினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், இந்தியா – உக்ரைன் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.

அப்போது, கருங்கடல் வழியாக உக்ரைனின் தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுத்து வருவது குறித்து ஜெலன்ஸ்கி எடுத்துரைத்தார். இதனால் உலகின் பல நாடுகளில் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும், கருங்கடல் வழியாக உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் வழித்தடங்களை (Food Corridors) உருவாக்க இந்தியா மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் உக்ரைன் போர் மற்றும் அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையே அபுதாபியில் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்தத் தொடர்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : “மன்மோகன் சிங் ஆட்சியை நடத்தினார்; நான் கட்சியை வழிநடத்தினேன்”.. சோனியா காந்தி!

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!
Supreme Court

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி உருக்கம்!
Sonia Gandhi on India

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com