Sonia Gandhi on India: இந்திரா, ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை என சோனியா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Sonia Gandhi on India: இந்திரா, ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை என சோனியா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Published on: November 8, 2026 at 1:14 pm
புதுடெல்லி, நவ.8, 2026: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்து புதிய நினைவுக் குறிப்பில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘Belonging: A Journey of Love’ என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
1960களில் கேம்பிரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்ததாகவும், முதல் சந்திப்பிலேயே அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் சோனியா தெரிவித்துள்ளார். 1968ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், இந்திரா காந்தியுடன் ஒரே வீட்டில் வசித்த அனுபவங்களையும், குடும்ப உறவுகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நேரில் பார்த்த அதிர்ச்சியான அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது சகோதரி இத்தாலிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியபோதும், இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை என்றும், “இந்தியாதான் எனது வீடு; எனது குழந்தைகளின் வீடு” என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகியிருந்த சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு 1998ஆம் ஆண்டு கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றபோதும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததாகவும், தனது அரசியல் பயணம் தனிப்பட்ட விருப்பத்தால் அல்ல; கடமை உணர்வால் அமைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com