லண்டன் ஓபன் ஸ்குவாஷ்.. காலிறுதிக்கு முன்னேறினார் வேலவன் செந்தில்குமார்!

Velavan Senthilkumar: லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், காலிறுதிக்கு முன்னேறினார் வேலவன் செந்தில்குமார்.

Published on: November 7, 2026 at 5:38 pm

லண்டன், நவ.7, 2026: லண்டனில் நடைபெற்று வரும் 18 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகைக்கான லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தத் தொடரில் அவர் இரண்டாம் நிலை வீரராகக் களமிறங்கியுள்ளார்.

இரண்டாவது சுற்றுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 124ஆவது இடத்தில் உள்ள பராகுவே வீரர் பிரான்சிஸ்கோ மார்கன்டோனியுடன் வேலவன் மோதினார். இதில் 11-5, 11-7, 14-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பைப் பெற்றார்.

உலகத் தரவரிசையில் 42ஆவது இடத்தில் உள்ள வேலவன், அடுத்ததாக காலிறுதியில் பிரான்ஸ் வீரர் அமீர் காலித்-ஜூசலினை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆண்டில் இதுவரை இரண்டு பிஎஸ்ஏ காப்பர் நிலை ஸ்குவாஷ் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

இதற்கிடையே, மற்றொரு இந்திய வீரரான அயான் வாசிரல்லி முதல் சுற்றிலேயே இங்கிலாந்தின் பென் ஸ்மித்திடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். கடந்த வாரம் செக் ஓபன் பட்டம் வென்ற வேலவன், சமீபத்திய வெற்றிப் பயணத்தை லண்டன் ஓபனிலும் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : சென்னை ஓபன் டென்னிஸ்.. காலிறுதியில் மாயா ஏமாற்றம்!

இந்திய டென்னிஸில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மாயா ராஜேஸ்வரன்.. அதிரடி ஆட்டத்தால் முன்னேற்றம்!
Maya Rajeshwaran

இந்திய டென்னிஸில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மாயா ராஜேஸ்வரன்.. அதிரடி ஆட்டத்தால் முன்னேற்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com