12ஆம் வகுப்பு மாணவன் கொலை.. இளம்பெண் உள்பட 3 பேர் கைது!

Kerala Instagram Murder Case: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் சந்திக்க அழைத்து 17 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: November 4, 2026 at 12:16 pm

திருவனந்தபுரம், நவ.4, 2026: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 17 வயது சிறுவன் அபிராம் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிராம் கொலையின் உண்மையான இலக்கு அல்ல என்றும், அவரது மற்றொரு நண்பரைக் கொலை செய்யத் திட்டமிட்டு, அவரை அழைத்து வருவதற்காக அபிராமைப் பயன்படுத்த நினைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு பெண்ணிடம் மற்றொரு நண்பர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி, அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக அபிராமை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, அவரது நண்பரை அங்கு அழைத்து வரச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், திட்டமிட்டபடி அந்த நண்பர் சம்பவ இடத்திற்கு வராததால், அபிராமுக்கும் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அபிராம் தப்பிச் செல்ல முயன்றபோது, அவரைத் தாக்கி பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு நபரின் உதவியுடன் உடலைச் சாக்குப் பையில் அடைத்து மறைவான இடத்தில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 17 வயது சிறுவன், 18 வயது இளம்பெண் மற்றும் உமர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் அளித்துள்ள புதிய வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை மற்றும் கொலைக்கான முழுப் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு.. உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு!

மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி மறுப்பு!
Abhijeet Dipke

மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Modi Slams Opposition

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com