பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்.. 1,225 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. 23,800-ஐ கடந்த நிஃப்டி!

Stock Market Rally: பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம் ஏற்பட்ட நிலையில், 1,225 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது; 23,800-ஐ கடந்துள்ளது நிஃப்டி.

Published on: November 4, 2026 at 11:51 am

மும்பை, நவ.4, 2026: இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,225.07 புள்ளிகள் உயர்ந்து 76,917.85 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 370.05 புள்ளிகள் அதிகரித்து 23,810.85 புள்ளிகளை எட்டியது.

கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை இரு குறியீடுகளும் எட்டியுள்ளன. குறிப்பாக, நிஃப்டி 23,800 புள்ளிகளைக் கடந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த நான்கு வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் சுமார் 5 சதவீதமும், நிஃப்டி 4.9 சதவீதமும் உயர்ந்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை சரிவு, நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் மீதான நம்பிக்கை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை ஆகியவை சந்தையின் ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, வங்கி, எஃப்.எம்.சி.ஜி., ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

நிஃப்டி 50 பட்டியலில் பிஎஸ்இ நிறுவனப் பங்குகள் சுமார் 5 சதவீதம் உயர்ந்து முதலிடத்தைப் பிடித்தன. நெஸ்லே இந்தியா, டாடா கன்சூமர் புராடக்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேவேளையில், பவர் கிரிட், எஸ்பிஐ மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இதையும் படிங்க : பங்குச்சந்தையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம்.. 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com