தங்கம் விலை சரிவு.. சென்னையில் 22, 24 காரட் தங்கத்தின் விலை என்ன?

Chennai Gold Rate Today: தங்கம் விலை சரிவு கண்ட நிலையில், நவம்பர் 3-ம் தேதி சென்னையில் 22, 24 காரட் தங்கத்தின் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: November 3, 2026 at 12:47 pm

சென்னை, நவ.3, 2026: இந்தியாவில் தங்கம் விலை இன்று (நவம்பர் 3) சற்று குறைந்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு மத்தியில், 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.13,964 ஆகவும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.12,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது என குட் ரிட்டர்ன்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,964-க்கும், 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10,475 ஆக உள்ளது.

மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,964-க்கும், 22 காரட் தங்கம் ரூ.12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் மட்டும் விலை சற்று அதிகமாக உள்ளது.

நவம்பர் 2ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.27-ம், 22 காரட் தங்கம் ரூ.25-ம், 18 காரட் தங்கம் ரூ.20-ம் குறைந்துள்ளது. இதற்கிடையே, சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர முயற்சித்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் 23% உயர்வு.. அக்டோபரில் ரூ.2.31 லட்சம் கோடி வருவாய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com