Jailer 2 Box Office Collection: ரூ.812 கோடியை வசூலித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்.
Jailer 2 Box Office Collection: ரூ.812 கோடியை வசூலித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்.

Published on: November 3, 2026 at 1:17 pm
சென்னை, நவ.3, 2026: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியான இப்படம், 19 நாட்களில் உலகளவில் ரூ.812 கோடி வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.537.75 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் வரி நீங்கலான நிகர வசூல் ரூ.459.70 கோடியாக உள்ளது. வெளிநாடுகளில் ரூ.274.25 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தகக் கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தெரிவித்துள்ளது.
19ஆவது நாளான திங்கட்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.3.40 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இதில் தமிழ் பதிப்பு ரூ.2.20 கோடியும், இந்திப் பதிப்பு ரூ.60 லட்சமும், தெலுங்குப் பதிப்பு ரூ.43 லட்சமும், கன்னடப் பதிப்பு ரூ.17 லட்சமும் வசூலித்துள்ளன.
இதற்கிடையே, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், ‘ஜெயிலர் 2’ படத்திற்குக் கிடைக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் ரூ.1,000 கோடி வசூல் இலக்கை எட்டுவது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : அஜித்துடன் மீண்டும் இணையும் பார்த்திபன்.. ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com