ரசிகர்களோடு ரசிகராக சூப்பர் ஸ்டார்.. சென்னை தியேட்டரில் ஆரவாரம்.. 40 ஆண்டுக்கு பின் சம்பவம்!

Rajinikanth: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் தியேட்டரில் ‘ஜெயிலர் 2’ படம் பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Published on: October 26, 2026 at 1:19 pm

சென்னை, அக்.26, 2026: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து தனது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படம் பார்த்திருப்பதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள பிவிஆர் திரையரங்கிற்கு வெள்ளிக்கிழமை இரவு ரஜினிகாந்த் சென்றார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரும் இருந்தனர். ரஜினிகாந்த் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்க்கும் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரையரங்கில் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் படம் பார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ஏற்கெனவே வசூலில் கவனம் ஈர்த்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்தின் இந்த வருகை அவர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பெண்களின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.. ஃபெமினா ஜார்ஜ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com