Kumararaja-Vijay Sethupathi Reunion: ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
Kumararaja-Vijay Sethupathi Reunion: ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Published on: October 25, 2026 at 2:04 pm
சென்னை, அக்.25, 2026: இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வசூல் சாதனை.. முதல் வாரத்திலேயே இத்தனை கோடியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com