வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain Alert: வங்கக்கடலில் நிலவும் நன்கு குறிக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதற்கிடையே நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 24, 2026 at 6:00 pm

சென்னை, அக். 24, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து நன்கு குறிக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (அக். 24) காலை 5.30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த வானிலை அமைப்பு நிலவுகிறது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று பிற்பகல் 1 மணி வரை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதி காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பின்னர் வட ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கவும், மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நீலகிரியில் கனமழை, பல இடங்களில் மண்சரிவு! சிக்கிய 150-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் மீட்பு

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு மட்டுமே கொடுமையாகாது! சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு
Court Verdict

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு மட்டுமே கொடுமையாகாது! சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com