விசிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது.. தொல். திருமாவளவன்

VCK Government Formation: விசிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published on: October 25, 2026 at 11:20 am

சென்னை, அக்.25, 2026: தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், விசிகவின் தற்போதைய அரசியல் நிலையைத் திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கியக் கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

தங்களைத் தனிமைப்படுத்தவோ, அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கட்சியின் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகத் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், கட்சியின் வளர்ச்சியையும் அரசியல் செல்வாக்கையும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் விசிக முக்கியப் பங்கு வகிக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.

இதையும் படிங்க : மகளிர் உரிமைத் தொகை ₹2500 விரைவில்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com