POCSO Case : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வேத பாடசாலையில் மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் எழுந்த புகாரில் பீகாரைச் சேர்ந்த ஆசிரியர் துர்கேஷ் திவாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
POCSO Case : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வேத பாடசாலையில் மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் எழுந்த புகாரில் பீகாரைச் சேர்ந்த ஆசிரியர் துர்கேஷ் திவாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Published on: October 24, 2026 at 2:35 pm
திருநெல்வேலி, அக். 24 2026: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே செயல்பட்டு வரும் வேத பாடசாலையில், 10 வயது சிறுவனுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் துர்கேஷ் திவாரி (24) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் திவாரி, தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த உண்டு உறைவிட வேத பாடசாலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேதப் பாடங்களைக் கற்பித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அங்கு எட்டு பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு நேரங்களில் மாணவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன், தனக்கு நேர்ந்ததைப் பாடசாலை அமைந்துள்ள கட்டடத்தின் உரிமையாளரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
துர்கேஷ் திவாரிக்கு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : கேரள ஸ்பாவில் மீட்பு.. சென்னையிலும் பாலியல் சுரண்டலுக்கு ஆளானாரா ஆந்திரா சிறுமி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com