224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

CM Vijay: 224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியத்தை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்.

Published on: November 3, 2026 at 1:42 pm

சென்னை, நவ.3, 2026: தமிழகத்தில் கடந்த 2015 முதல் 2022ஆம் ஆண்டு வரை குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு, அரசின் மானியத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 224 தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியத் தொகையை முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு சார்பில் விடுவித்துள்ளார். இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று 224 தயாரிப்பாளர்களுக்கும் தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். கடந்த 8 ஆண்டுகளுக்கான திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் தலைமையிலான குழு அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டு, நல்ல கருத்துகளையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மானியத் தொகை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மானியம் பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் திரைப்படத் தயாரிப்பால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என்றும், இந்த நிதியுதவி பல குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரூ.850 கோடியை நெருங்கும் ரஜினிகாந்த் படம்.. ஜெயிலர் -2 பாக்ஸ்ஆபிஸ் அறிக்கை!

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!
Sai Pallavi

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com