Arikomban: நடிகரும் இயக்குநருமான மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அரிகொம்பன்’.
Arikomban: நடிகரும் இயக்குநருமான மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அரிகொம்பன்’.

Published on: November 3, 2026 at 12:29 pm
சென்னை, நவ.3, 2026: நடிகரும் இயக்குநருமான மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அரிகொம்பன்’. மேஜிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், காட்டு யானை ஒன்றையும், வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, எம். ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜய் வில்லனாக நடித்துள்ளார்.
பழங்குடியின மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்துவதற்காகக் காட்டுக்குள் இரண்டு கிராமங்கள் பிரம்மாண்டமான அரங்குகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : அஜித்துடன் மீண்டும் இணையும் பார்த்திபன்.. ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com