உலக தரவரிசையில் முன்னேறும் வைஷ்ணவி.. சென்னை ஓபன் போட்டிக்கு இலக்கு!

Vaishnavi: டாப் 200 தரவரிசையை குறிவைக்கிறார் இந்திய டென்னிஸ் வீராங்கனை வைஷ்ணவி அத்கர்.

Published on: November 3, 2026 at 12:17 pm

சென்னை, நவ.3, 2026: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 21 வயது வைஷ்ணவி அத்கர், சர்வதேச தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் முன்னேறுவதை இலக்காகக் கொண்டுள்ளார். தற்போது உலகத் தரவரிசையில் 344-வது இடத்தில் உள்ள அவர், சென்னையில் நடைபெறும் WTA 250 சென்னை ஓபன் போட்டிக்கு முன்னதாக தனது இலக்கு குறித்து தெரிவித்துள்ளார்.

மகளிர் டென்னிஸ் போட்டிகளில் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வைஷ்ணவியின் பலமாக அவரது ‘டாப்ஸ்பின் ஃபோர்ஹேண்ட்’ ஷாட் உள்ளது. அதிக சுழற்சியுடன் செல்லும் இந்தப் பந்து, எதிரணி வீராங்கனைகள் திருப்பி அடிப்பதற்குச் சவாலாக இருப்பதாகவும், இந்தியா மற்றும் ஆசிய வீராங்கனைகளிடம் இதுபோன்ற ஷாட் அரிதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ITF W100 பெங்களூரு தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதனை படைத்தார். தொடர்ந்து கர்நாடகாவின் கலபுரகியில் நடைபெற்ற ITF W35 தொடரில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இந்திய மகளிர் டென்னிஸில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தற்போது தனது உடற்தகுதி, ஆட்ட நுணுக்கம் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் வைஷ்ணவி, உலகின் முதல் 200 இடங்களுக்குள் முன்னேறி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவதே தனது அடுத்த இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்!

டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்!
International Tammer Boxing

டாம்மர் குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com