Hockey Victory: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
Hockey Victory: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

Published on: November 2, 2026 at 2:52 pm
Updated on: November 2, 2026 at 2:53 pm
ஜலந்தர், நவ. 2 2026: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2026 ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கு முன்பு இரு அணிகளும் தோல்வியைச் சந்திக்காமல் இருந்த நிலையில், இந்திய அணி மலேசியாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்தார். அவர் பெனால்டி கார்னர் வாயிலாக இரண்டு கோல்களையும், பெனால்டி ஸ்ட்ரோக் வாயிலாக ஒரு கோலையும் அடித்தார். சுக்ஜீத் சிங் மற்றொரு கோலைப் பதிவு செய்தார். மலேசியா அணியின் சார்பில் அகிமுல்லா மற்றும் ஷெல்லோ சில்வேரியஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதன்மூலம் இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் சிங்கின் கோல் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென்கொரிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம் தென்கொரியா நான்கு போட்டிகளில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதேநேரத்தில் வங்கதேச அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் சீனா மற்றும் ஜப்பான் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 2) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் இந்திய அணி தென்கொரியாவையும், சீனா வங்கதேசத்தையும், ஜப்பான் மலேசியாவையும் எதிர்கொள்கின்றன. இந்திய அணி நான்கு வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஏற்கெனவே இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 4ஆம் தேதி மொஹாலியில் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: ஹைலோ ஓபனில் இந்தியாவுக்கு இரட்டை மகுடம்.. சாம்பியன் பட்டம் வென்ற லக்ஷ்யா சென், பி.வி.சிந்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com