Gold Rate Today: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold Rate Today: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published on: November 2, 2026 at 2:42 pm
சென்னை, நவ. 2 2026: சென்னையில் தங்கம் விலை இன்று (நவம்பர் 2) மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,480 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,01,840-ல் இருந்து ரூ.1,02,200 ஆக அதிகரித்துள்ளது.
24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 13 936க்கும், சவரன் ரூ. 111488க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதியும் வெள்ளி இதே விலையில் விற்பனையானது.
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி தங்கம் விலை கடுமையாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 28 வகை புதிய பிஸ்கட்கள் அறிமுகம்.. நடிகர் அஜித் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com