ஹைலோ ஓபனில் இந்தியாவுக்கு இரட்டை மகுடம்.. சாம்பியன் பட்டம் வென்ற லக்ஷ்யா சென், பி.வி.சிந்து!

Badminton Glory: ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷ்யா சென், பி.வி.சிந்து இருவரும் சாம்பியன் பட்டம் வென்று இரட்டை மகுடம் சூடியுள்ளனர். சிந்து டென்மார்க் வீராங்கனையையும், லக்ஷ்யா சென் இந்தோனேசிய வீரரையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

Published on: November 2, 2026 at 2:06 pm

சார்ப்ரூக்கன், நவ. 2 2026: ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் நகரில் நடைபெற்ற ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதன்மூலம் ஒரே தொடரில் இரு ஒற்றையர் பட்டங்களையும் இந்தியா கைப்பற்றி இரட்டை மகுடம் சூடியுள்ளது.

மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க்கின் லைன் க்ஜேர்ஸ்ஃபெல்ட்டை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஹைலோ ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தொடர்ந்து இரண்டு வாரங்களில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். தொடர்களில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். கடந்த ஜூலை மாதம் ஜப்பான் ஓபனில் பட்டம் வென்ற பிறகு, தற்போது மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதற்கிடையே ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், நடப்பு சாம்பியனான இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் 21-17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஹைலோ ஓபன் பட்டத்தை வென்றார்.

இதன்மூலம் நடப்பாண்டில் தனது முதல் பி.டபிள்யூ.எஃப். பட்டத்தை லக்ஷ்யா சென் கைப்பற்றியுள்ளார். மேலும், ஹைலோ ஓபன் தொடரில் இரண்டு முறை ஆடவர் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒரே தொடரில் சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது இந்திய பேட்மிண்டன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து!

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!
India vs New Zealand T20

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com