ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து!

PV Sindhu Final Entry: தொடர்ந்து 2-வது வாரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் பி.வி.சிந்து.

Published on: November 2, 2026 at 11:36 am

பெர்லின், நவ.2, 2026: ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து இரண்டாவது வாரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சகநாட்டு வீராங்கனையான அன்மோல் கர்பை எதிர்கொண்ட சிந்து, 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

வெறும் 32 நிமிடங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அனுபவத்தையும் அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்திய சிந்து, அன்மோலுக்கு கடும் நெருக்கடி அளித்தார். இரண்டாவது செட்டில் அன்மோல் 15-13 என முன்னிலை பெற்றபோதும், சிந்து சிறப்பாக விளையாடி தொடர்ந்து புள்ளிகளைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிந்து, அதில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். தற்போது மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர், இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கியர்ஸ்ஃபெல்ட்டை எதிர்கொள்கிறார்.

இதற்கிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவை 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஹைலோ ஓபன் தொடரில் மகளிர் மற்றும் ஆடவர் என இரு பிரிவுகளிலும் இந்தியாவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளே என் பணி.. கவுதம் கம்பீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com