பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்க வீரர்களுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகை.. முதல்வர் விஜய் வழங்கினார்

Asian Para Games: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்க வீரர்களுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.

Published on: October 30, 2026 at 1:13 pm

Updated on: October 30, 2026 at 1:14 pm

சென்னை, அக்.30, 2026: ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6.85 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதில் பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.75 கோடியும், வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.1.05 கோடியும் வழங்கப்பட்டது. நீளம் தாண்டுதல் வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ், சிவராஜன் சோலைமலை, கஸ்தூரி ராஜமணி, பேபி சஹானா, ஜே.டி. மதன் ஆகிய வீரர், வீராங்கனைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மேலும், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் 2,600 வீரர், வீராங்கனைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன்படி, வழக்கமான விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.500-ம், முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் 319 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு 143 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், கோயம்புத்தூர் 118 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பிறப்பன்வலசையில் ரூ.42.90 கோடியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமியையும், சேலம் கருப்பூரில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு வளாகத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் யார்? ரோஹித் சர்மா, திலக் வர்மா இடையே போட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com