ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் யார்? ரோஹித் சர்மா, திலக் வர்மா இடையே போட்டி!

Rohit Sharma: ஐபிஎல் 2027இல் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் யார்? ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

Published on: October 30, 2026 at 12:39 pm

மும்பை, அக்.30, 2026: ஐபிஎல் 2027 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்குவதா அல்லது இளம் வீரர் திலக் வர்மாவிடம் நீண்டகால தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்றவர் ரோஹித் சர்மா. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது அவருக்கு 40 வயதாகும் என்பதால், 2027 சீசனில் மட்டும் அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, எதிர்காலத்துக்கு இளம் வீரரைத் தயார்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக உள்ள திலக் வர்மாவை நீண்டகாலத் தலைமைப் பொறுப்புக்குத் தயார்படுத்தும் வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது. மேலும், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும், அவர்களிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இதற்கிடையே, கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், 2027 ஐபிஎல் தொடருக்கான கேப்டன் தேர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும், ரோஹித் சர்மா அல்லது திலக் வர்மா ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

இதையும் படிங்க : மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ரூ.1.10 கோடிக்கு சோஃபி மோலின்யூவை வாங்கிய UP வாரியர்ஸ்!

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!
India vs New Zealand T20

நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com