அனிருத் – காவ்யா திருமண ஏற்பாடுகள்.. தினமும் 3, 4 முறை ஆலோசனை! அழைப்பிதழ் வடிவமைப்பாளர் தகவல்

Anirudh: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமணச் செய்திகள் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளன.

Published on: October 31, 2026 at 3:24 pm

சென்னை, அக்.31, 2026: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமணச் செய்திகள் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளன. இவர்களின் திருமணம் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இவர்களது திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை வடிவமைத்த ரஞ்சனி ஐயங்கார், திருமண ஏற்பாடுகள் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அனிருத் மற்றும் காவ்யா இருவரும் அழைப்பிதழ் வடிவமைப்பில் நேரடியாக ஈடுபட்டதாகவும், தினமும் 3 முதல் 4 முறை வரை தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மற்றும் நீல நிறக் கலவையில் மரத்தால் செய்யப்பட்ட பெட்டியில், கையால் வரையப்பட்ட அலங்காரங்கள், முப்பரிமாண வடிவமைப்புகள் என அழைப்பிதழ் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை முழுமையாக்க சுமார் நான்கு மாதங்கள் ஆனதாகவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகப் பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகவும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள திருமண வரவேற்பில் திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : ரூ.1,000 கோடியைத் தாண்டும் ஜெயிலர் 2.. விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கணிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com