Thoothukudi Fishing Resumes: தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை காரணமாக 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது.
Thoothukudi Fishing Resumes: தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை காரணமாக 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது.

Published on: October 31, 2026 at 3:53 pm
தூத்துக்குடி, அக்.31, 2026: தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை காரணமாக 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது. வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதையடுத்து, இன்று (அக்டோபர் 31) அதிகாலை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 260 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கடந்த சில நாட்களாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மீண்டும் கடலுக்குள் சென்றதால் மீன்பிடி நடவடிக்கைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த 6 நாட்களாக மீன்பிடித் தொழில் முடங்கியதால் மீனவர்கள் மட்டுமின்றி, மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி இருந்தனர். மீன்பிடித் தொழில் மீண்டும் தொடங்கியிருப்பது அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள், இந்த முறை அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். படகுகள் கரைக்குத் திரும்பிய பிறகே மீன் வரத்து குறித்த முழுமையான நிலவரம் தெரியவரும்.
இதையும் படிங்க : தவெக அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி போராட்டம் ஓர் எச்சரிக்கை மணி.. மு.க.ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com