நவம்பர் 1 முதல் சென்னை புறநகர் ரயில் கால அட்டவணையில் மாற்றம்.. முழு விவரம்!

Suburban Train Timings: நவம்பர் 1 முதல் சென்னை புறநகர் ரயில் கால அட்டவணையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.

Published on: October 31, 2026 at 11:23 am

சென்னை, அக்.31, 2026: சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணையில் தெற்கு ரயில்வே மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தப் புதிய கால அட்டவணை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, திருவள்ளூரில் இருந்து மதியம் 12.25 மணிக்குப் புறப்படும் புதிய ரயில், மதியம் 1.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தைச் சென்றடையும். மேலும், மூர்மார்க்கெட் – பட்டாபிராம் இடையே இயக்கப்படும் சில ரயில்கள் திருவள்ளூர் வரையிலும், மற்றொரு ஜோடி ரயில்கள் கடம்பத்தூர் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மேலும், மாலை 7.30 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. மாலை 7.45 மணிக்கு இயக்கப்படும் மெதுவான ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அதிகாலை 5.20 மணிக்குப் புறப்படும் ரயில் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அரக்கோணம் – சென்னை கடற்கரை அரை விரைவு ரயில், இனி கூடுவாஞ்சேரியிலும் நின்று செல்லும். இதற்கிடையே, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 3 நாள்களில் 4 கிலோ குறைந்த அன்பில் மகேஷ்.. வழக்கறிஞர் தகவல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com