Reliance Profit Growth: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 33.8% ஆக உயர்வு கண்டுள்ள நிலையில், ஒரே காலாண்டில் ரூ.29,550 கோடியாக காணப்படுகிறது.
Reliance Profit Growth: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 33.8% ஆக உயர்வு கண்டுள்ள நிலையில், ஒரே காலாண்டில் ரூ.29,550 கோடியாக காணப்படுகிறது.

Published on: October 31, 2026 at 2:44 pm
மும்பை, அக்.31, 2026: முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 27.8 சதவீதம் அதிகரித்து ரூ.3.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் இதுவரையிலான காலாண்டு வருவாயில் புதிய உச்சமாகும்.
அதேபோல், நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 33.8 சதவீதம் அதிகரித்து ரூ.29,550 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.22,092 கோடியாக இருந்த லாபம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, எண்ணெய் மற்றும் ரசாயனப் பிரிவு, டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடு வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 13.7 சதவீதம் உயர்ந்து ரூ.8,387 கோடியாகவும், செயல்பாட்டு வருவாய் 11.4 சதவீதம் அதிகரித்து ரூ.40,475 கோடியாகவும் உள்ளது. மறுபுறம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வருவாய் 6.4 சதவீதம் உயர்ந்து ரூ.91,716 கோடியாக இருந்தாலும், அதன் செயல்பாட்டு லாபம் 8.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதையும் படிங்க : சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை.. மீதமுள்ள 14 கி.மீ. பணிக்கு ரூ.614 கோடியில் டெண்டர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com