நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. விலை எவ்வளவு தெரியுமா?

Liquor Price Hike: நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.10 உயர்வு காண்கிறது.

Published on: October 30, 2026 at 7:43 pm

சென்னை, அக்.30, 2026: தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.10 உயர்த்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணத்தை மதுபானங்களின் விலையில் சேர்ப்பதன் மூலம் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

இதுவரை காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக விற்பனை கவுன்டரில் தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 கட்டணம், இனி மதுபாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே சேர்க்கப்படும்.

உதாரணமாக, தற்போது ரூ.170-க்கு விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலின் விலை நவம்பர் 1 முதல் ரூ.180 ஆக இருக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் பாட்டிலுக்கு கூடுதலாகத் தனியாக ரூ.10 செலுத்த வேண்டியதில்லை.

அதேநேரத்தில், தகுதியான காலி மதுபாட்டில்களைத் திருப்பி ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10 தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் புதிய நடைமுறை இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், பீர், ஒயின் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்களுக்கும் பொருந்தும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மின்சாரத் தேவை அதிகரிப்பு.. கவனிக்க வேண்டிய 5 பவர் எக்யூப்மென்ட் பங்குகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com