CM Vijay: தேசியம், ஆன்மிகத்தின் அடையாளம் முத்துராமலிங்கத் தேவர் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
CM Vijay: தேசியம், ஆன்மிகத்தின் அடையாளம் முத்துராமலிங்கத் தேவர் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

Published on: October 30, 2026 at 7:32 pm
சென்னை. அக்.30, 2026: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவர் நாட்டுப்பற்றையும் ஆன்மிகத்தையும் தனது இரு கண்களாகக் கருதி வாழ்ந்தவர் என்று முதல்வர் விஜய் புகழாரம் சூட்டினார். மக்களிடம் சுதந்திர உணர்வைத் தூண்டும் வகையில் வீரமிக்க பேச்சாற்றலுடன் அவர் செயல்பட்டதையும் முதல்வர் நினைவுகூர்ந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பிய தேவர், இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆதரவு திரட்டியதுடன், நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்டார் என்று விஜய் குறிப்பிட்டார்.
மேலும், சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர் எனத் தெரிவித்த முதல்வர், அவரது உயரிய கொள்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : வந்தாச்சு மழை முன்னறிவிப்பு.. சென்னைவாசிகளே நோட் பண்ணுங்க.. நவ.1,2 மழை இருக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com