Rain Alert: அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain Alert: அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 30, 2026 at 2:13 pm
சென்னை, அக்.30, 2026: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வலுவடைந்து புயலாக மாறினால், வட தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், புதிய வானிலை அமைப்பின் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே மழையின் அளவைத் துல்லியமாகக் கணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : திருச்சி விமான நிலையத்தில் 45 அரிய வகை உயிரினங்கள் மீட்பு.. 2 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com