Neil Samraj 200m National Record: 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார் தமிழக வீரர் நீல் சம்ராஜ்.
Neil Samraj 200m National Record: 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார் தமிழக வீரர் நீல் சம்ராஜ்.

Published on: October 28, 2026 at 11:35 am
சென்னை, அக்.28, 2026: தமிழகத்தைச் சேர்ந்த இளம் தடகள வீரர் நீல் சம்ராஜ் ஆர்., ஆடவருக்கான 18 வயதுக்குட்பட்டோரின் 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
இந்தப் போட்டியில் நீல் சம்ராஜ் 200 மீட்டர் தூரத்தை 21.03 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம், கடந்த மூன்று ஆண்டுகளாக அபய் சிங் வசம் இருந்த 21.08 விநாடிகள் என்ற தேசிய சாதனையை அவர் முறியடித்தார்.
ஏற்கெனவே இதே தொடரில் 100 மீட்டர் ஓட்டத்திலும் 10.45 விநாடிகளில் இலக்கை எட்டி, 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம், இத்தொடரில் இரண்டு தேசிய சாதனைகளைப் படைத்ததுடன், ஆடவர் U18 பிரிவின் சிறந்த வீரராகவும் நீல் சம்ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே, மகளிர் U20 பிரிவு 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பவானா ஜி., 23.82 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். ஒட்டுமொத்த அணிப் பிரிவில் தமிழகம் 317.2 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஹரியாணா அணி 303 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதையும் படிங்க: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி: பும்ரா, ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com