Ajith Dare Devil Movie Pooja: அஜித்தின் ‘டேர் டெவில்’ பட பூஜை நவம்பர் 2-ல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ajith Dare Devil Movie Pooja: அஜித்தின் ‘டேர் டெவில்’ பட பூஜை நவம்பர் 2-ல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 28, 2026 at 11:46 am
சென்னை, அக்.28, 2026: நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை வரும் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 64-வது படமான இது, ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் திரைப்படமாகும்.
முதலில் நவம்பர் 2-ஆம் தேதியே படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி விடுமுறைக்குப் பிறகு படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன்படி, நவம்பர் 13 அல்லது 16-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார், தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com