TMB Quarterly Profit: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி காலாண்டு லாபம் ரூ.451 கோடியாக உயர்வு கண்டுள்ளது.
TMB Quarterly Profit: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி காலாண்டு லாபம் ரூ.451 கோடியாக உயர்வு கண்டுள்ளது.

Published on: October 28, 2026 at 11:59 am
சென்னை, அக்.28, 2026: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.451 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில், இது 42 சதவீதம் அதிகமாகும். வங்கியின் முக்கிய வணிக வருவாய் உயர்வு மற்றும் செலவுக் கட்டுப்பாடு இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
வங்கியின் நிகர வட்டி வருவாய் 35.17 சதவீதம் உயர்ந்து ரூ.807 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கியின் மொத்த வணிகம் ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வைப்புத்தொகை 25.49 சதவீதம் அதிகரித்து ரூ.69,546 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன்கள் 29.32 சதவீதம் உயர்ந்து ரூ.60,691 கோடியாகவும் உள்ளன.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.280 கோடியில் சுமார் 20 சதவீதத்தை இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிட வங்கி திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகள் மற்றும் இணையவழிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 60 புதிய கிளைகளைத் திறக்க வங்கி திட்டமிட்டுள்ளது. இதில் குறைந்தது 20 கிளைகள் தமிழகத்திற்கு வெளியே திறக்கப்பட உள்ளன. வங்கியின் கடன் வளர்ச்சி 22 சதவீதத்திற்கும் அதிகமாகவும், வைப்புத்தொகை வளர்ச்சி 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க : தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றம்.. மினிமம் சார்ஜ் ரூ.50!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com