28 New Biscuit Varieties: தமிழகத்தில் 28 வகை புதிய பிஸ்கட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
28 New Biscuit Varieties: தமிழகத்தில் 28 வகை புதிய பிஸ்கட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Published on: November 1, 2026 at 9:03 pm
சென்னை, நவ.1, 2026: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (ஆர்.சி.பி.எல்), தமிழகத்தில் தனது பிஸ்கட் விற்பனையை விரிவுபடுத்தும் வகையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ‘இன்டிபெண்டன்ஸ்’ பிராண்டின் கீழ் 9 தயாரிப்புகளில் 28 புதிய வகை பிஸ்கட்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்தப் புதிய தயாரிப்புகளில் இன்டிபெண்டன்ஸ் பவர் அப், மில்கி பவர், பட்டர் பிளிஸ், மேரி பிரைம், கோகோ வெண்ணிலா, கிரீம்யம் உள்ளிட்ட வகைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பால், குளுக்கோஸ் மற்றும் புரதச்சத்து ஆகியவற்றைக் கொண்ட பவர் அப் பிஸ்கட் முக்கிய தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பிஸ்கட்கள் நவம்பர் 2ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.
இதற்கிடையே, இன்டிபெண்டன்ஸ் பவர் அப் பிஸ்கட் விளம்பரத்தை முன்னெடுக்கும் வகையில், நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணியான ‘அஜித் குமார் ரேசிங்’ உடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. மோட்டார் பந்தயத்தின் வேகம் மற்றும் செயல்திறனைப் புதிய தயாரிப்பின் அடையாளத்துடன் இணைத்து, தமிழக நுகர்வோரிடம் பிரபலப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புதிய பிஸ்கட்கள் 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 40 ரூபாய் முதல் 125 ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், ரிலையன்ஸ் ரீடெய்ல் மையங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு.. ஒரே நாளில் 10 கிராமுக்கு ரூ.3,200 குறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com