Nepal Snowfall: நேபாளத்தில் பனிப்பொழிவில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Nepal Snowfall: நேபாளத்தில் பனிப்பொழிவில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Published on: November 2, 2026 at 12:24 pm
காத்மாண்டு, நவ.2, 2026: நேபாளத்தின் டோல்பா மாவட்டத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்கா பகுதியில், கடும் பனிப்பொழிவு காரணமாக 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்களில் 2 பெண்களும், 4 ஆண்களும் அடங்குவர். சனிக்கிழமை பிற்பகல் முதல் அவர்கள் அப்பகுதியில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷே-போக்சுண்டோ கிராமப்புற நகராட்சியின் 8-வது வார்டில் உள்ள தோ (Dho) பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக அப்பகுதி முழுவதும் பனியால் சூழப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக அந்தப் பகுதிக்குச் செல்வது ஆபத்தானது என பாதுகாப்புப் படையினரும், அவர்களுடன் சென்ற நேபாள வழிகாட்டியும் எச்சரித்துள்ளனர். இருப்பினும், எச்சரிக்கையை மீறி ஏரிப் பகுதியை நோக்கிச் சென்ற சுற்றுலாப் பயணிகள், வழிகாட்டியை விட்டுப் பிரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ள இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க நேபாள ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தலைமை அதிகாரி ஜுனு தகால் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிக்காக பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : விமானத்தில் சக விமானி தாக்குதல்.. உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com