Spain train Collision: ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
Spain train Collision: ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: October 29, 2026 at 2:29 pm
மாட்ரிட், அக்.29, 2026: ஸ்பெயின் நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள டோலிடோ மாகாணத்தில், இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
மாட்ரிட்டில் இருந்து செவில்லே நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு ரயில்கள் ஒரே திசையில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் இரயிலின் பின்புறத்தில், அரசுக்குச் சொந்தமான ரயில் மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் வேகத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன.
விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா பகுதிகளுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு மற்றும் ரயில் இயக்கம் தொடர்பான உத்தரவுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் ஸ்பெயினில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 45 பேர் உயிரிழந்திருந்த நிலையில், மற்றொரு கோர விபத்து அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இஸ்ரேல் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு.. ஆட்சியைத் தக்கவைக்க நெதன்யாகு தீவிர முயற்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com