ட்ரம்ப் கோரிக்கையை நிராகரித்த தமிழன்.. அவரே சொன்ன புலம்பல்!

Donald Trump: “அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற சுந்தர் பிச்சை மறுத்தார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Published on: October 23, 2026 at 1:28 pm

நியூயார்க், அக்.23, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘டிரம்ப் பெருங்கடல்’ என மாற்றுவது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த யோசனையை சுந்தர் பிச்சை நிராகரித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.

தெற்கு கரோலினாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற முடியுமா எனக் கேட்டபோது, “வேண்டாம், வேண்டாம், வேண்டாம்; இந்த முறை என்னால் செய்ய முடியாது” என சுந்தர் பிச்சை பதிலளித்ததாகத் தெரிவித்தார்.

மேலும், பெருங்கடல்கள் பல நாடுகளின் எல்லைகளை ஒட்டிப் பரவியுள்ளதால், அவற்றின் பெயரை மாற்றுவது சிக்கலானது என சுந்தர் பிச்சை விளக்கியதாக டிரம்ப் கூறினார். இருப்பினும், இந்த உரையாடல் நடைபெற்றதை கூகுள் நிறுவனம் சுயமாக உறுதிப்படுத்தவில்லை.

இதையடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றும் யோசனையைக் கைவிடலாம் என டிரம்ப் தெரிவித்தார். முன்னதாக, மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ எனப் பெயர் மாற்றிய நடவடிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க : மெக்காவில் 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை.. சவுதி சட்டம் எழுப்பும் கேள்விகள்!

டிரம்பின் ரஷ்ய எரிபொருள் ஒப்பந்தத்துக்கு எதிராக மசோதா.. குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அதிரடி!
Russia Fuel Deal

டிரம்பின் ரஷ்ய எரிபொருள் ஒப்பந்தத்துக்கு எதிராக மசோதா.. குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அதிரடி!

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு!
Donald Trump

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com