Om Birla: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் புதிதாகத் தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
Om Birla: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் புதிதாகத் தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Published on: October 23, 2026 at 1:40 pm
Updated on: October 23, 2026 at 1:41 pm
புதுடெல்லி, அக்.23, 2026: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் புதிதாகத் தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்கும் உரிய நடைமுறைகளைப் போன்றே சட்டப்பூர்வமான செயல்முறைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர்.
புதிய தீர்மானம் முறைப்படி முன்வைக்கப்பட்டால், அதற்கான விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இருப்பினும், தீர்மானம் ஏற்கப்படுமா என்பது குறித்து அவர் எந்த முன்கூட்டிய முடிவையும் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க : காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான்பூச்சி கைகோர்ப்பு.. கவனம் பெறும் பா.ஜ.க எதிர்ப்பு புதிய கூட்டணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com