Sasikumar: நடிகர் சசிகுமார், டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 22-வது திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
Sasikumar: நடிகர் சசிகுமார், டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 22-வது திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Published on: October 23, 2026 at 1:18 pm
சென்னை, அக்.23, 2026: நடிகர் சசிகுமார், டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 22-வது திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வெற்றிவேல்’, ‘அயோத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்நிறுவனத்துடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார். கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இதன் மூலம் அவர் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் சசிகுமாருடன் நரேன், அஞ்சலி நாயர், ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில், 6 டைமென்ஷன்ஸ் ஃபிலிம் அண்ட் மீடியாவும் இணைந்துள்ளது.
ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் தலைப்பு, கதைக்களம் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : தனுஷின் சிறந்த பாலிவுட் நடிகை யார்? சோனம் கபூரைத் தேர்வு செய்த தனுஷ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com