Asian Para Games Medal Assured: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறிய மானசி ஜோஷி – துளசிமதி முருகேசன் ஜோடியால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Asian Para Games Medal Assured: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறிய மானசி ஜோஷி – துளசிமதி முருகேசன் ஜோடியால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published on: October 18, 2026 at 12:51 pm
நாகோயா, அக்.18, 2026: ஜப்பானின் நாகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் மானசி ஜோஷி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் ஜோடி பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்குப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. SL3-SU5 பிரிவில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் யுமேய் லியு, டோங்டோங் லி ஜோடியை 21-10, 21-17 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜோடி குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பிடித்தது. இதற்கு முன்பு இந்த ஜோடி இந்தோனேசியாவின் ரஹாயு வாரினிங், கோனிதா இக்தியார் சியாகுரோ ஜோடியையும் வீழ்த்தியிருந்தது. அரையிறுதியில் தோல்வியடையும் இரு ஜோடிகளுக்கும் வெண்கலப் பதக்கம் உறுதி என்பதால், இந்தியாவுக்கான பதக்கம் உறுதியாகியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் மானசி ஜோஷி – துளசிமதி முருகேசன் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ள இந்த ஜோடி, தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இதற்கிடையே, ஆடவர் ஒற்றையர் SH6 பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசியாவின் சுபானை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். மேலும், நிதேஷ் குமார், பிரமோத் பகத் உள்ளிட்ட இந்திய வீரர்களும் தங்களது போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ஐசிசி கோப்பையை வெல்ல அழுத்தம் அதிகரிப்பு.. பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com