ஐசிசி கோப்பையை வெல்ல அழுத்தம் அதிகரிப்பு.. பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான்

Fakhar Zaman on ICC Pressure: ஐசிசி கோப்பையை வெல்ல அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது என பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் கூறியுள்ளார்.

Published on: October 18, 2026 at 12:24 pm

இஸ்லாமாபாத், அக்.18, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நீண்ட காலமாக ஐசிசி கோப்பையை வெல்லாததால், வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக அந்த அணியின் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் தெரிவித்துள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி ஐசிசி பட்டத்தை வென்றது. அதன் பிறகு முக்கிய ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் அணி தவித்து வருகிறது.

ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபகர் ஜமான், ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது குறித்து அணிக்குள் பலமுறை விவாதித்துள்ளதாகக் கூறினார். பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்போது ரசிகர்கள் அன்பையும் பாராட்டுகளையும் வழங்குகிறார்கள்; தோல்வியடையும்போது ஏமாற்றம் அடைகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறியது. ஆனால், மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதைவிட, கோப்பையை வெல்வதன் மூலம் ஒரு நாட்டுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது என்றும் ஃபகர் ஜமான் தெரிவித்துள்ளார்.

2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி இப்போதே தயாராகி வருகிறது. இங்கிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்பு தொடரை உலகக் கோப்பைக்கான சரியான அணிக் கலவையை உருவாக்குவதற்கான முதல் படியாகக் கருதுவதாகவும், கோப்பையை மீண்டும் பாகிஸ்தானுக்குக் கொண்டுவர முழு முயற்சி எடுப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஜெயவர்தனே விலகல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com